முடக்கநிலையை தளர்த்தும் முயற்சியில் பிரித்தானியா! முன்பள்ளிகள் திறக்கப்பட்டன

Report Print Murali Murali in பிரித்தானியா

கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானியாவில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் முன்பள்ளிகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதி பகுதியில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோன தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உலக நாடுகள் முடக்கநிலையை அறிவித்திருந்தன.

இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரித்தானியா தற்போது முடக்கநிலையை தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் விடுத்திருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு பின்னர் முன்பள்ளிகள் மீளவும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து லட்சக்கணக்கான சிறுவர்கள் முன்பள்ளிக்கு திரும்பியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், கொரோனா அச்சம் காரணமாக ஏராளமான பெற்றோர்கள் பிள்ளைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்பவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முடக்கநிலையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அது குறித்து தொடர்ந்து ஆராயப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.