பிரித்தானியாவில் அமுலாகும் புதிய கட்டுப்பாடு! மீறுவோருக்கு 100 பவுண்ஸ் அபராதம்

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவில் எதிர்வரும் 24ம் திகதி முதல் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் நபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நடைமுறைகளை மீறுவோருக்கு 100 பவுண்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு சுகாதார நடைமுறைகளை ஒவ்வொரு நாடுகளும் அறிமுகப்படுத்திவருகின்றன.

அந்த வகையில் பிரித்தானியாவில் ஜூன் 15ம் திகதி முதல் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது எதிர்வரும் 24ம் திகதி முதல் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் நபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அபாயத்தை முகாமை செய்யும் நோக்கில் இந்த முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நடைமுறைகளை மீறுவோருக்கு 100 பவுண்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தப்படும் பட்சத்தில் இந்த தொகை 50 பவுண்ஸ்கள் வரை குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊழியர்கள் தமது வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பொலிஸார் அது தொடர்பில் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் எந்த வகையிலாவது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் இயுஸ்டீஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமுல்படுத்தப்பட உள்ள நடைமுறை வர்த்தகர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டல் தெளிவாகவும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற ஸ்கொட்லாந்து, ஸ்பெய்ன், இத்தாலி மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் பிரித்தானியாவும் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.