பிரித்தானியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக ஊரடங்கு காரணமாகவும் மரணம்!

Report Print Ajith Ajith in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக ஊரடங்கு காரணமாகவும் மரணமடைந்துள்ளனர்.

தகவல்களின் அடிப்படையில், கொரோனா நோயாளிகளில் மூவர் இறக்கும் அதேவேளையில், முக்கிய மருத்துவ சிகிச்சைகளை ஊரடங்கால் தவறவிட்ட மற்றும் இருவர் மரணமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த மார்ச் முதம் முதல் மே மாதம் வரையான காலகட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 25,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனாவுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்ல மறுத்து மரணமடைந்த 6,000 பேருடன் மொத்தம் 16,000 பேர் ஊரடங்கால் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க அரசாங்க அறிவுறுத்தலை கடைபிடித்த மக்களே முக்கிய மருத்துவ சிகிச்சைகளை தவறவிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மருத்துவமனைகளில் இருந்து முன்னரே விடுவிக்கப்பட்ட முதியவர்கள் சுமார் 10,000 பேர் அவர்கள் தங்கியிருந்த முதியோர் இல்லங்களில் மரணமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு உரிய சிகிச்சை தேவையான வேளையில் வழங்கப்படவில்லை என்பதே மரணங்களுக்கான காரணமாகும்.

இதற்கிடையில் சுகாதார கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால் செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் 26,000 இறப்புகளை இங்கிலாந்து எதிர்கொள்ள இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.