ஐரோப்பாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா - பிரித்தானியாவில் கடுமையாகும் சட்டம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
186Shares

ஐரோப்பாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அது மிகவும் ஆபத்தான நிலைமை எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பதிவாகிய நோயாளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தற்போது வாரங்கள் தோறும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை, ஐரோப்பாவின் சில நாடுகளில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்படும் போது இங்கிலாந்தில் இதுவரையில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 167 வரை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவும் வடக்கு மற்றும் கிழக்கு பிரித்தானியாவில் வாழும் 9.2 மில்லியன் மக்களுக்கு நள்ளிரவு முதல் கடுமையான கட்டம் திட்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா சுகாதார அமைச்சர் மெட்ஹென்கொக் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அனைத்து ஹோட்டல், உணவகம், மதுபானம் விற்பனை செய்யப்படும் இடங்கள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும். வீட்டினுள் அல்லது வெளியே எவ்வித புதிய நபர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியா பல்கலைக்கழக கட்டமைப்பு மீண்டும் திறக்கப்படவுள்ளமையினனால் அதன் ஊடாக வைரஸ் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளர்.

மேலும் போர்த்துகளில் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியின் பின்னர் முதல் முறையாக நேற்றைய தினம் 770 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பிரான்ஸில் 10 ஆயிரம் கொரோனா நோயாளிகள் மற்றும் ஞாயிற்றுகிழமை இத்தாலியில் 1210 நோயாளிகளும் அடையாம் காணப்பட்டுள்ளனர்.

நிலவும் நிலைமைக்கமைய எதிர்வரும் வாரங்களில் ஐரோப்பாவினுள் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைய கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.