பிரித்தானியாவில் அவசரமாக மூடப்பட்டுள்ள சில பாடசாலைகள்

Report Print Jeslin Jeslin in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள சில ஆரம்ப பாடசாலைகள் அவசரமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் அண்மைய சில நாட்களாக கொரோனாத் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இதற்கு முன்னர் கொரோனாத் தொற்றின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் சிறிது சிறிதாக மீள இயங்க ஆரம்பித்திருந்த நிலையிலேயே தற்போது மீண்டும் சில ஆரம்ப பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தற்போது நாளொன்றிற்கு 4000இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஆரம்ப பாடசாலை மாணவர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சிற்சில பாடசாலைகளில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கி, ஏனைய வகுப்புகளுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் கொரோனா தொற்று பாடசாலை மட்டத்தில் அதிகரித்து வருவதனால் தற்காலிகமாக ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்கள் பாடசாலைகள் நிறுத்தப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி மீள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு பிரித்தானியாவில் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பிரித்தானிய பிரதமர் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளாவன,

வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடிய அலுவலர்கள் வீட்டில் இருந்தே செய்ய வேண்டும்.

இங்கிலாந்தில் Pub, Bar, Restaurants அனைத்தும் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்.

வியாழக்கிழமை முதல் டேபிள் சர்வீஸ் மட்டுமே அனுமதிக்கப்படும். Take-away , Delivery சேவைகள் தொடரும்.

Taxi, தனியார் வாகனங்களில் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும்.

ஓக்டோபர் 1ம் தேதி முதல் விளையாட்டு அரங்குகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் திட்டம் தற்காலிக ரத்து செய்யப்படுகிறது.

முகமூடி அணியாமல் இருப்பவர்கள், ஆறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடுபவர்களுக்கு முதல் முறையாக 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதியை மீறுபவர்களுக்கு தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.