லண்டனில் நடந்த பயங்கரம்! பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியா - தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் 23 வயதான இளைஞரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி 2.15 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்த சந்தேகநபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு பொலிஸார் அவரை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பொலிஸ் அதிகாரியை சுட்ட சந்தேகநபர், தானும் சுட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பொலிஸ் அதிகாரியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.