கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, உட்புறங்களில் மக்கள் சந்திக்க விதிக்கப்பட்டிருந்த காட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 40,921,660 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1,126,930 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவிலும் 762,542 பேர் கொரோனா வைரஸ் தெற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 43,967 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மை நாட்களாக பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகின்றது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்நாட்டு அரசாங்கம் நேற்று இரவு இந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பப்கள் மற்றும் உணவகங்கள் போன்ற உட்புறங்களில் மக்கள் ‘வேலை தொடர்பான விடயங்களை சந்தித்து பேச அனுமதிக்கப்படுவதாக பரிந்துரைத்துள்ளது.
வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த 30 பேர் வரை வேலை தொடர்பான விஷயங்களுக்காக உட்புறங்களில் சந்திக்கலாம் என்று அரசாங்க வழிகாட்டுதல் விதித்திருக்கிறது.
ஆனால், அவர்கள் சந்தித்து பேசும் இடத்தில் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றுப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.