பிரித்தானியாவில் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து! வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in பிரித்தானியா

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து அடுத்தவாரம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்று தற்போது உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பாதிப்புகளை குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இது இவ்வாறு இருக்க கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா ஏற்கனவே தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தான AstraZeneca’s அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக நவம்பர் 2ம் திகதி வைத்தியசாலைகளுக்கு தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவி வருவதனால் அங்கு மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரித்தானியாவில் 894,690 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44,998 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.