பிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு! அரசு விதித்துள்ள தடை

Report Print Murali Murali in பிரித்தானியா

கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில், வடக்கு பிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி, அங்கு மதுபான விடுதிகள், கடைகள் ஆகியவற்றுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் அனைவரும் தேவையில்லாத பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக பிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகள் திறக்கப்பட்டன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், பிரித்தானியாவில் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.