பிரித்தானியாவில் ஒரு வருடமாக சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Report Print Murali Murali in பிரித்தானியா
169Shares

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அல்லாத சிகிச்சைகளுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் 139,545 நோயாளிகள் தங்கள் மருத்துவமனை சிகிச்சையைத் தொடங்க 52 வாரங்களுக்கும் மேலாக காத்திருந்தனர். இது 2019 செப்டம்பரில் வெறும் 1,305 ஆக இருந்தது.

கொரோனா வைரஸ் அல்லாத வழக்கமான சிகிச்சைக்காக பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒரு வருடத்திற்கு முன்பு இதே நேரத்தில் 27% குறைந்துவிட்டதாக பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைகள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தரவுகளின்படி, பிரித்தானியாவில் உள்ள NHS (தேசிய சுகாதார சேவைகள்) மருத்துவமனைகள் அவற்றின் புற்றுநோயாளர்களின் இலக்குகளை அடையத் தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 94.5% புற்றுநோய் நோயாளிகள் குறிப்பிடப்பட்ட ஒரு மாதத்திற்குள் தங்கள் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.

செப்டம்பரில், நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் மற்றும் காஸ்ட்ரோஸ்கோபி போன்ற சோதனைகளுக்காக ஆறு வாரங்களுக்கு மேல் காத்திருந்தனர்.

NHSஇன் (தேசிய சுகாதார சேவைகள்) இலக்கு நோயாளிகளில் வெறும் ஒரு வீதமானவர்களே ஆறு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பதாகும்.