முடக்கல் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம்! பலரும் கைது

Report Print Murali Murali in பிரித்தானியா
566Shares

மத்திய லண்டனில் முடக்கலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆரப்பட்டத்தில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒக்ஸ்போர்ட் வீதிக்கு அருகிலுள்ள நகரத்தின் வழியாக "சுதந்திரம்" என்று கோஷமிட்டனர்,

சிலர் "எங்களை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள்" மற்றும் "மேலும் முடக்குதல் இல்லை" என்று எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிபிடித்து ஆரப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுவது உட்பட பல சந்தேகத்திற்கிடமான குற்றங்களுக்காக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் வீட்டிற்கு செல்ல மக்களை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்," என்று பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

பொலிஸாருக்கும் சில எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் "மிகவும் வன்முறையான, மோதல்கள் நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மக்கள் எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவ்விடத்தில், சிவப்பு மற்றும் பச்சை நிற புகை இருந்தது," என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் நடவடிக்கையைப் பார்த்து ஆர்ப்பாட்டக்காரர்களாக "உங்களை நினைத்து வெட்கம் அடைகிறோம்” என முழக்கமிட்டுள்ளனர். மேலும் பலர் இதன் போது முகக்கவசம் அணியாததுடன் வீட்டிற்கு செல்லவும் மறுத்துள்ளனர்.

ஆர்ப்பட்டக்காரர்கள் மேலும் "முகக்கவசங்களை தள்ளிவிடுங்கள் " மற்றும் முகக்கவசங்களை கட்டயமாக்க வேண்டாம்" என்றும் சத்தமிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக லண்டனில் உள்ள கிங்ஸ் கிரொஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பொலிஸார் மக்களை இந்த வார இறுதியில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் என்பது பிரித்தானியாவில் தற்போதைய கொரோனா வைரஸ் விதிமுறைகளின் கீழ் கூடியிருக்கும் தடைகளுக்கு அனுமதிக்கப்பட்ட விலக்கு அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.