வைரஸ் கட்டுக்குள் இருக்கின்றது! பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு

Report Print Murali Murali in பிரித்தானியா
84Shares

பிரித்தானியாவில் முடக்கம் என்பது “மீண்டும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்” என்பதை கூறியுள்ளது என அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்தள்ளார்.

அதேநேரம் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். டவுனிங் வீதியில் இன்று செய்தியாளர் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இரண்டாவது தேசிய முடக்கம் என்பதை கடினமானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், கடுமையான கொரோனா நடவடிக்கைகள் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியாவில் தொற்று பரவும் வேகம் 30 வீதமாக குறைந்துவிட்டன. தேசிய முடக்கம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. எனினும், நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

மீண்டும் கொரோனா தொற்று பரவுவதற்கு அனுமதிக்க முடியாது. இரண்டாவது பூட்டுதலுக்கு முன்னர் காணப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட முறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மூன்று பேரில் ஒருவருக்கு வைரஸின் அறிகுறிகள் இல்லை, ஆனால் மற்றவர்களுக்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார். "அதனால் தேசிய கட்டுப்பாடுகளை எளிதாக்கும்போது கூட சில கட்டுப்பாடுகளை வைத்திருக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

எங்கள் கூட்டு முயற்சிகளின் வெற்றி என்பது புதன்கிழமை முதல் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும், அடுக்கு 3 இல் உள்ளவர்களுக்கும் கூட சில பெரிய சுதந்திரங்களைக் கொண்டிருக்க முடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் தீர்மானத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு பொது மக்களை, சுகாதார செயலாளர் வலியுறுத்தினார்.

“விடியலின் ஒளி அடிவானத்தில் உள்ளது”. “காலை வரை உறுதியாக நிற்க வேண்டிய தருணம் இது,

எனவே நாங்கள் திரும்பிப் பார்த்தால், நாங்கள் கொடுத்த எல்லாவற்றையும், நாங்கள் செய்த அனைத்தையும் தெளிவாகக் காணலாம்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.