லண்டனில் வெம்ப்லியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து தமிழீழ தேசியக் கொடியையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தையும் அகற்ற பிரித்தானிய பொலிஸார் உத்தரவிட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23 அன்று, வெம்ப்லியில் உள்ள குறித்த பல்பொருள் அங்காடியிக்கு சென்ற பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள், அந்த பகுதியில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டதாக முறைப்பாடுகள் வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் கடைக்கு வெளியே பறக்கவிடப்பட்ட தமிழீழ தேசியக் கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.
தமிழீழக் கொடி தடை செய்யப்படவில்லை என்று கடைக்காரர்கள் கூறிய போதிலும், காவல்துறை அதிகாரிகள் தங்கள் கோரிக்கையை மறுத்து, கொடியை அகற்றத் தவறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
"இதனையத்து, அங்குள்ள ஊழியர்கள் தமிழீழ தேசியக் கொடியையும், விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவத்தையும் அகற்ற வேண்டியிருந்தது" என்று பல்பொருள் அங்காடியில் ஒரு துணைக் கடையை நடத்தி வரும் ஒரு தொழில்முனைவோர் விளக்கினார்.
"இப்போது சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் அலங்காரங்கள் மட்டுமே பல்பொருள் அங்காடியில் பறக்க அனுமதிக்கப்படுகின்றன."
எவ்வாறாயினும், வெம்ப்லியில் உள்ள மற்றொரு கடையில் பெரிய அளவிலான அலங்காரங்கள் வைக்க அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.