பிரெக்ஸிட் உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டது! வெளியான அறிவிப்பு

Report Print Murali Murali in பிரித்தானியா
780Shares

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான பிரெக்ஸிட்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மீன்பிடி உரிமைகள் மற்றும் எதிர்கால வணிக விதிகள் தொடர்பான 04 ஆண்டுகள் மற்றும் 06 மாத கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜனவரி முதலாம் திகதி பிரெக்ஸிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல உடனபடிக்கையுடன் செல்ல பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது.

பிரித்தானியா சார்பில் லார்டு பாரஸ்ட், ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மைக்கேல் பார்னியர் மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து உருவாக்கியிருந்த உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

பிரெக்ஸிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என பிரித்தானியா விரும்பியது போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், "உடன்படிக்கை முடிவடைந்தது" என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவென்றின் மூலம் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் "முதலிட சந்தையாகவும்" இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், "நாங்கள் இறுதியாக ஓர் உடன்படிக்கையை கண்டுபிடித்துள்ளோம்.

இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா சாலையாக இருந்தது. ஆனால் அதன் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல உடன்படிக்கை கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.