80 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்! பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in பிரித்தானியா
197Shares

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று மட்டும் 1035 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,868 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று 59,937 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,017,409 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோ மட்டுமே அதிக கொரோனா இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லண்டனிலும், பிரித்தானியாவின் தென் கிழக்குப் பகுதியிலும் நிலைமை படுமோசமாக இருப்பதாக Royal College of Emergency Medicine மருத்துமனையின் துணைத் தலைவர் ஐயன் ஹிக்கின்ஸன் எச்சரித்திருக்கிறார்.

நாட்டின் மற்ற இடங்களிலும் நிலை வெகுவிரைவில் படுமோசமாவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நோய்ப்பரவலின் இருண்ட காலத்தை நோக்கி பிரித்தானிய சென்று கொண்டிருப்பது அச்சமூட்டுவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.