பிரித்தானியாவிற்குரிய சர்வதேச அங்கீகாரம் ஆனது அதன் சர்வதேச செயற்பாட்டில் தங்கியுள்ளதே தவிர வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல.
அதுவும் குறிப்பாக சர்வதேசத்தில் நடைபெறும் சட்டத்திற்கும், தர்மத்திற்கும் எதிராகநடைபெறும் செயற்பாடுகள் ஆகும் என லிபரல் டெமக்ராட்டுகளின் தலைவர் Ed Davey தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆகையால் நான் இன்று இந்த சபையின் முன்னால் இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றி விவரிக்க விரும்புகிறேன். மிகவும் முக்கியமாக தற்போது வரை இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தொடர்பான முன்மொழிவு எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியும், அவரின் சகோதரான பிரதமரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடிமக்களை இறுதி யுத்தத்தில் கொன்றழித்ததாக முறையிடப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது அவருக்கு நெருக்கமானவர்களையும், யுத்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் இராணுவத்தின் உயர் பதவியிலும் மற்றும் மற்றும் அரசு உயர் பதவிகளிலும் நியமித்து உள்ளார்கள்.
அத்துடன் லஞ்சம் ஊழல் மற்றும் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளும் அவர்களில் அடங்குவார்கள்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட யுத்ததில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் தூபியை தகர்த்த விடயம் தொடர்பாக இந்த வாரம் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குடியிருப்புகளில் உள்ள அனைத்துத் தமிழர்களும் அவற்றை அனுப்பி உள்ளனர்.
நினைவுத்தூபி உடைக்கப்பட்ட இலங்கையின் இந்த செயற்பாடானது இலங்கையின் நீண்ட கால சமாதான பொறிமுறையை பாதிக்கும் என்பது நிச்சயமாகும்.
ஆகையால் பிரித்தானியா எவ்வாறு இதை கையாளப் போகிறது? குறிப்பாக சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாக சர்வதேச அரங்கில் 46ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
ஆகையால் இங்கிருக்கும் அமைச்சர்களிடம் கேட்கிறேன், நாங்கள் இதை எவ்வாறு கையாளப் போகிறோம்? இந்த விடயம் தொடர்பாக பிரித்தானியா, மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஊடாக ஒரு விசேட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
சர்வதேச அனுசரணையுடன் கூடிய விசாரணையாக இருக்க வேண்டும். இந்த யுத்த குற்றத்துக்கான பொறுப்புக்கூறலுக்கு மற்றும் மனித உரிமையை பாதுகாக்கவும் அது உதவிசெய்யும்.
ஆகையால் நான் அவரிடம் வேண்டிக் கொள்கின்றேன், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பிரித்தானியா சர்வதேச அரங்கில் அதை பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக மனித உரிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களை பேணுவதற்கும் அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
உங்களைப் போலவே நானும் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவத்தை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் எதிர் கொல்லப்பட்டது காணப்படுகிறது. ஆனால் நினைவுத்தூபி ஆனது அவசியமானது. இழந்த மக்களின் உறவுகள் தமது துக்கத்தை வெளிப்படுத்த கட்டப்பட்டதே இந்த நினைவுத் தூபி ஆகும். இதுவும் இலங்கை அரசின் கொடுமையான செயற்பாடாகும். சிறுபான்மைஇனமான தமிழ் மக்களை இல்லாமல் ஆக்கும் அவர்களின் செயற்பாடாகும்.
மக்களுக்கு கூறுவது போல இது ஒரு நிர்வாகத்தின் கடமை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு அரசியல் பின்னணியில் நடத்தப்பட்ட கபட நாடகம். குறிப்பாக இந்த தமிழ் மக்களின் நினைவுகூருவதை தடுப்பதே இதன் பிரதானமாகும். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்கள்.
அவர்களது உரிமையை பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு எனது முழு ஆதரவு உள்ளது.
நான் உறுதி அளிக்கிறேன் எங்கள் தமிழ் மக்களுக்கு நாங்கள் என்றும் துணை நிற்பேன் வன்முறைகளால் மற்றும் காட்டுமிராண்டித்தனமான இனவாத மற்றும் ஒரு அரச பிரதிநிதிகள் மரணத்திற்கு எதிராக நான் பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு எழுதியுள்ளேன்.
இது தொடர்பாக இலங்கை அரசிடம் விளக்கம் கூற வேண்டும் என்றும் அதிலும் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இறந்த மக்கள் மற்றும் போராளிகள் நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.
2009 ஆம் ஆண்டு எமது அப்போதைய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கையில் பொதுமக்கள் யுத்தத்தில் கொலைசெய்யப்பட்டதற்காக தமது முழு எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஆகையால் நான் எமது அரசு தனது கடமையை சரிவர செய்யும் என்று நம்புகின்றேன் என்று கூறியுள்ளார்.