புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக பிரித்தானிய வங்கிகள் புதிய முடிவு

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய புலம்பெயர்ந்தவர்கள் தங்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களா என அந்நாட்டு வங்கிகள் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டு வங்கிகள் மற்றும் நிதியளிப்பு நிறுவனங்கள் இந்நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட இப்புதிய நடவடிக்கை மூலம் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட, நாடுகடத்தப்பட உள்ள மற்றும் குடியமர்வு அதிகாரிகளிடம் இருந்து தலைமறைவாக உள்ள புலம்பெயர்ந்தவர்கள் தங்களது வாடிக்கையாளர்களாக உள்ளனரா என்பது கண்டுபிடிக்கப்படும்.

இதுபோன்ற சட்டவிரோதமான புலம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் கணக்குகளை நிதியளிப்பு நிறுவனங்கள் உடனடியாக முடக்கிவிடும்.

மேலும், வங்கிகள் மற்றும் நிதியளிப்பு நிறுவனங்களின் இந்நடவடிக்கையால் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் வசித்து வருபவர்கள் எளிதில் கண்டுபிடிக்கப்படுவார்கள்.

கடந்தாண்டு நாடாளுமன்றத்தால் சட்டமாக்கப்பட்ட இந்நடைமுறை எதிர்வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

இந்நடைமுறை அமுலுக்கு வந்தவுடன் ஒவ்வொரு 3 மாதமும் சுமார் 70 மில்லியன் வாடிக்கையாளர்களின் கணக்குகள், அவர்களின் பின்னணி விபரங்கள் பரிசோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.