பிரித்தானியாவில் £1 வாங்கப்பட்ட வீடு: இப்போது எப்படியிருக்கிறது தெரியுமா.

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெறுமையாகக் கிடந்த நகரங்களைக் குடியேற்றும் நோக்கில் 1 பவுண்டிற்கு விற்கப்பட்ட வீடுகள் இன்று புதுப்பிக்கப்பட்டு கண்கவர் மாளிகைகளாய் காட்சியளிக்கின்றன.

சமீபத்தில் இத்தாலியில் 1 யூரோவுக்கு வீடுகள் விற்கப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் Liverpoolஇலும் கடந்த 2015ம் ஆண்டு வீடுகள் 1 பவுண்டிற்கு விற்கப்பட்டன.

வாங்கியவர்கள் ஒரு வருடத்திற்குள் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும், இல்லையென்றால் வீடு திம்பப்பெறப்படும், இழப்பீடு எதுவும் வழங்கப்படாது என்ற கண்டிஷனோடு இவ்வீடுகள் விற்கப்பட்டன.

1 பவுண்டுக்கு வீடா என ஆர்வமாக வந்த பலர் வீடுகள் இருந்த பாழடைந்த நிலைமையைக் கண்டதும் சற்று அதிர்ச்சியுற்றனர் என்றாலும், வீடுகளில் அதிக இடம் இருப்பதைக் கண்டதும் இந்த வீடுகளை விட அவர்களுக்கு மனமில்லை.

Samஉம் Rachaelஉம் அவர்களது வீட்டை வாங்கியபோது படிக்கட்டுகளின் அடியில் இருந்து நீரூற்று போல் தண்ணீர் கொட்டியது.

பாத்ரூமிலிருந்து மேலே நிமிர்ந்துபார்த்தால் வானம் தெரியும், ஆம் அங்கே கூரையே இல்லை. இப்படிப் பல சிக்கல்கள் என்றாலும் அவர்கள் மனம் தளரவில்லை, இரவும் பகலும் பாடுபட்டனர்.

இன்று மேயரே அவர்கள் வீட்டைப் புகழ்ந்து தள்ளுகிறார். Samஉம் Rachaelஉம் செய்த வேலை மற்றவர்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

விருப்பமும் மன உறுதியும் இருந்தால் பாழடைந்த கட்டிடத்தையும் கனவு இல்லமாக மாற்ற முடியும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்கிறார் அவர்.

30 வயதான Victoria Brennan, Liverpool John Moores பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கிறார். பாழடைந்த ஒரு வீடும், அந்த வீட்டைப் புதுப்பிக்க 38,000 பவுண்டுகள் லோனும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

இன்று அழகான வீட்டுக்கு சொந்தக்காரர் என்கிற பெருமையுடன் அவர் உலாவருகிறார்.

வீடுகள் என்ற அளவோடு நிறுத்திவிடாமல், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சமுதாயத்தையே உருவாக்கி Liverpoolக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.