பிரித்தானிய விசா விண்ணப்பிப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
382Shares

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பிரித்தானிய விசா கட்டணம் ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து உயர்கிறது.

பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களின் மருத்துவ செலவுகளை சந்திக்கும் நோக்கில், Immigration health surcharge (IHS) என்னும் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதே விசா கட்டண உயர்வுக்கு காரணம் ஆகும்.

மாணவர்கள், வேலை செய்வதற்காக வருபவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

2015இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த உப கட்டணம், புலம்பெயர்ந்தோரும் மருத்துவ சேவை பெற வகை செய்கிறது.

இந்த விடயம் தொடர்பில் உள்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, IHS இரு மடங்காக உயர்வதாக தெரிவித்தார்.

ஆண்டொன்றிற்கு 200 பவுண்டுகளிலிருந்து 400 பவுண்டுகளாக இந்த உப கட்டணம் உயர இருக்கும் நிலையில், Youth Mobility Scheme திட்டத்தின் கீழிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 150 பவுண்டுகளிலிருந்து 300 பவுண்டுகளாக உயர இருக்கிறது.

ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின் விசாவுக்கு விண்ணப்பிக்கும் புலம் பெயர்வோர், இந்த உயர்த்தப்பட்ட உப கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

பிரித்தானிய அரசு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி பிரித்தானியாவுக்கு வெளியிலிருந்து விசாவுக்கு விண்ணப்பிக்கும் கீழ்க்கண்டோர் இந்த உப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

  1. ஐரோப்பிய பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ளவர்கள்.
  2. வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ அல்லது பிரித்தானியாவிலிருக்கும் உங்கள் குடும்பத்தினருடன் சேருவதற்காகவோ, 6 மாதங்களுக்கு மேல் நீங்கள் பிரித்தானியாவில் இருக்க விரும்பினால் (ஆனால் நீங்கள் பிரித்தானியாவில் நிரந்தரமாக இருப்பதற்கு விண்ணப்பிக்காத பட்சத்தில்) இந்த உப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

சட்டப்பூர்வமாக பிரித்தானியாவில் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு தங்கியபின் நிரந்தர வாழிட உரிமை பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு இந்த உப கட்டணம் கிடையாது.