பிரித்தானியாவின் பவுண்ட் பெறுமானத்தில் உயர்வு

Report Print Dias Dias in பிரித்தானியா
பிரித்தானியாவின் பவுண்ட் பெறுமானத்தில் உயர்வு

அமெரிக்க டொலருடன் ஒப்பீடு செய்ததில் பிரித்தானிய பவுண்ட்ஸ் பெறுமதி 0.18 வீதத்தால் இன்று புதன் காலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ப்றேக்சிட் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகக் கூடும் என்ற வதந்தியின் எதிர் விளைவாகவே, பவுண்ட்ஸ் பெறுமானம் அதிகரித்துள்ளதாக அவதானிகள் கருதுகிறார்கள் .

செப்டெம்பர் 14 அன்று இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை 0.25 வீதமாக வைத்திருந்தது. ஆனால் எதிர்காலத்தில் இது மேலும் உயரலாம் என்பதற்கு இது ஒரு சமிக்ஞையாக இருந்தது .எந்த நேரத்திலும் இந்த வட்டி விகிதம் உயரலாம் என்று அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள் .

பெறுமானத்தில் உயர்வு காணும் பிரித்தானியாவின் பவுண்ட்ஸ்

கடந்த கோடை காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய விலகல் தொடர்பான வாக்கெடுப்புக்கு பின்னர் வீழ்ச்சி கண்ட இந்த 0.25 வீதம் , இன்றுவரையில் உயரவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகது.