அமெரிக்க குரல் வானொலி மூடப்படவுள்ளது?

Report Print Kamel Kamel in அமெரிக்கா
84Shares

சிலாபம் இரணவில பகுதியிலிருந்து இயங்கி வரும் அமெரிக்க குரல் என்ற வானொலிச் சேவையின் ஒலிபரப்பு மத்திய நிலையத்தை மூடி விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 23 ஆண்டுகளாக சிலாபத்தில் இந்த வானொலி ஒலிபரப்பு நிலையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வானொலி ஒலிபரப்பு நிலையம் 920 ஏக்கர் காணிப் பரப்பில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதிக்குள் இலங்கையர்கள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காரணமாக படையினரும் பொலிஸாரும் கூட இந்தப் பகுதிக்குள் பிரவேசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின், வொய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற வானொலிச் சேவை ஆசியாவின் பல பகுதிகளுக்கு சிலாபத்திலிருந்தே ஒலிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

வானொலி ஒலிபரப்பு மையத்தை மூடி, அந்தப் பகுதியை சுற்றுலா பகுதியாக மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments