அரசியலில் குதிக்கும் பேஷ்புக் ஸ்தாபகர்!

Report Print Steephen Steephen in அமெரிக்கா
152Shares

பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் இணை ஸ்தாபகரும் தலைவருமான Mark Zuckerberg 2020ஆம் ஆண்டில் அரசியலில் குதிப்பார் என பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள 30 மாநிலங்களுக்கு பயணம் செய்து மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ஒருவரே இவ்வாறு மக்களின் கருத்துக்களை அறிய எதிர்பார்ப்பார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் இணை ஸ்தாபகரான Mark Zuckerberg அரசியலில் பிரவேசிக்கக்கூடும் என கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தான் அரசியலில் சம்பந்தப்படுவது எப்படி என்பது குறித்து Mark Zuckerberg தனது சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உள்ளமை மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

1984 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நியூயோர்க்கில் பிறந்த 32 வயதான Mark Elliot Zuckerberg, பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் இணை ஸ்தாபகர் என்பதுடன் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.

பேஷ்புக் சமூக வலைத்தள நிறுவனத்தின் மொத்த மதிப்பு 51.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments