"சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும்" அமெரிக்கர்களை உருக வைத்த மிச்செல் ஒபாமாவின் நெகிழ்ச்சி உரை

Report Print Gokulan Gokulan in அமெரிக்கா
373Shares

"சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும். அமெரிக்க அதிபர் பதவி என் கணவருக்கு அதனாலேயே சாத்தியமாயிற்று" என மிசெல் ஒபாமா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 20ஆம் திகதியோடு முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய நன்றி உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தது எனது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். அந்தவகையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து உங்களை கௌரவப்படுத்தியிருப்பதாக நான் நம்புகின்றேன்.

இளைஞர்கள் எதற்கும் பயம் கொள்ளக் கூடாது. உங்களால் முடியும் என்று நம்பிக்கைக் கொள்ள வேண்டும். எதற்கும் பயம் கொள்ள வேண்டாம். கவனமாக இருங்கள், தீர்க்கமாய் இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், அதிகாரத்துடன் இருங்கள், தரமான கல்வியுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.

அந்தக் கல்வியை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்லுங்கள். நம்பிக்கையுடன் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் இனிவரும் காலங்களில் அமெரிக்க மக்கள் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments