மக்களுக்காக கவனமாக தயாரிக்கப்பட்ட ஒபாமாவின் இறுதி உரை..!

Report Print Vino in அமெரிக்கா
369Shares

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இன்று தனது கடைசி உரையினை நிகழ்த்தவுள்ளார். ஒபாமா ஜனாதிபதி பதவியில் உள்ள போது நிகழ்த்தும் கடைசி உரை என்பதால் மக்கள் அதனை கேட்க ஆர்வமாக உள்ளனர்.

அந்தவகையில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு ஒபாமா சிகாகோவில் தனது உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதுவே அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தின் கடைசி உரை என்பதால் அவரது உரை மிக கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments