பூமிக்கு வந்த வேற்றுக்கிரக படைகள்.! - ஒரே நேரத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான பறக்கும் தட்டுகள்.!

Report Print Mawali Analan in அமெரிக்கா
1740Shares

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மர்ம பறக்கும் தட்டுகள் வானத்தில் வட்டமடித்த சம்பவம் ஒன்று அமெரிக்க நகர்ப்பகுதிகளில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறாக ஒரே நேரத்தில் பறக்கும் தட்டுகள் வானத்தில் தோன்றியமை இதுவே முதல் தடவை எனவும் இது பூமிக்கு ஏற்படப்போகும் ஆபத்தின் அறிகுறியா என்ற வகையிலும் ஆய்வுகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த பறக்கும் பொருட்கள் வேற்றுக்கிரகவாசிகளின் தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவையே என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இவை பயணிக்கும் வேகம் அத்தோடு நடுவானில் இவை நிலைகொண்டு பறக்கும் அடிப்படையில் வைத்து இது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் எனவும் இது தொடர்பில் வெளியாக காணொளியை ஆய்வு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல அமெரிக்க இராணுவத்தினர் இவ்வாறான சிறிய கண்காணிப்பு விமானங்களை பறக்கவிட்டு அவதானித்துள்ளனர் எனினும் அவற்றின் செயற்பாடுகளும் காமராவில் சிக்கிய பறக்கும் தட்டுகளின் செயற்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவை வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் என்றே தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வேற்றுக் கிரகவாசிகள் பூமியை ஆக்ரமிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்ததோடு பல சர்வதேச நாடுகளும் இதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இதுவும் வேற்றுக்கிரகவாசிகள் பூமியை தாக்க முன்னெடுக்கும் ஓர் முன்னாயத்தமா என்ற வகையிலும் ஆய்வுகளை தொடருகின்றனர் .

எப்படியிருப்பினும் பல மர்மங்களை மனித வர்க்கத்திற்கு தெரியப்படுத்தாமலே விஞ்ஞானிகள் மௌனம் காத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments