திடீர் உடல் நலக்குறைவு..! அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Murali Murali in அமெரிக்கா
330Shares

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் திடீர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது அலுவலக பேச்சாளர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியான ஜோர்ஜ் புஷ் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருக்கிறார்.

தற்போது 92 வயதை அடைந்துள்ள அவர், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததையிட்டு ஹூஸ்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரது உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் அவரது அலுவலக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments