அமெரிக்க யுஎஸ்என்எஸ் போல் ரிவர் போக்குவரத்துக் கப்பல் நேற்று அம்பாந்தோட்டையைசென்றடைந்தது.
இரண்டு வார கால மனிதாபிதான நடவடிக்கைகளின் நிமித்தம் அந்த கப்பல் அங்குசென்றுள்ளது.
இந்தக் கப்பலில் படையினரும் அமெரிக்காவின் சிவில் நிபுணர்களும் உள்ளடங்குகின்றனர்.
பொறியியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், விசேட நிபுணர்கள் ஆகியோர் மனிதாபிமானபணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
மருத்துவ முகாம்களும் பாடசாலைகளை செப்பனிடும் பணிகளும் மேற்;கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை ஜப்பான் அவுஸ்ரேலிய மற்றும் இலங்கை படையினருடன் கூட்டு படை ஒத்திகைப் பயிற்சிநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.