நெருங்கிவரும் Mosul நகர முற்றுகையும், சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்களும்

Report Print Suresh Tharma in அமெரிக்கா
789Shares

கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பித்த ஈராக்கின் மசூல் நகர முற்றுகையானது ISIS அமைப்பை மிகவும் பலவீனமாக்கி நகரின் மேற்குப் பகுதியில் ஒதுங்க வைத்துள்ளது.

மசூல் நகரின் மேற்குப் பகுதியை மீட்கும் நடவடிக்கை பல மாதங்களாக இடம்பெறலாம் என்ற நிலையிலிருந்த போது, சிரியாவின் இரசாயனத் தாக்குதலும், அதற்கான அமெரிக்காவின் பதிலடித் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

இதனால் களநிலைமைகளில் மாற்றமேற்பட வாய்ப்புண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ISIS அமைப்பிற்கு எதிராக போராடி வந்த அமெரிக்கத் தரப்பு,

சிரியா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தம்மிடையேயான போட்டி பொறாமைகளின் காரணமாக, ISIS அமைப்பிற்கு எதிரான போரில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், சிரியா மீதான அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா கூறியுள்ளார்.

Comments