அமெரிக்காவில் இலங்கை பெண் கொலை! தமிழ் நீதிபதியின் உத்தரவு

Report Print Vethu Vethu in அமெரிக்கா

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இலங்கை பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

27 வயதான Dantey Moore என்பவரின் பிணையை நிராகரித்து விளக்கமறியலை நீடிக்குமாறு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இந்த கொலை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இலங்கையை பூர்வீகமாகவும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற கீதா கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்குமாறு சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி Marina Tricorico, நீதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த நபர் மீதும் இந்த சந்தேக நபர் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

ஏற்கனவே இந்த சந்தேக நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவற்றில் ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை வழக்கு நாளைய தினம் மீளவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.