அமெரிக்கா - வாஷிங்டன் மாநிலத்தில் கோர விபத்து! பலர் பலியாகியதாக தகவல்

Report Print Murali Murali in அமெரிக்கா
1390Shares

அமெரிக்கா - வாஷிங்டன் மாநிலத்தில் பயணிகள் ரயிலொன்று தடம்புரண்டு நெடுஞ்சாலையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ரயிலில் 78 பயணிகளும், 5 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ரயிலில் பயணித்தவர்களே உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்துள்ள அவசர சேவைகள், விபத்தில் சிக்கியவர்களுக்கு வீதியில் வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் சர்வதேக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில், தற்போது மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குறித்த ரயில் 130 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.