கலிபோர்னியாவில் மண்சரிவு அனர்த்தம்! இலங்கையர்கள் பாதிப்பு?

Report Print Samy in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கலிபோர்னியாவின் தென்பகுதியில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்தத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் கலிபோர்னியாவின் தென்பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவிக்கின்றது.

அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.