அமெரிக்க வெளியுறவு செயலர் பதவி நீக்கம்! ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை!

Report Print Samy in அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப் புதிய வெளியுறவுச் செயலர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எக்ஸான் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான டில்லர்சன் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்.

கினா ஹாஸ்பல்-ஐ சி.ஐ.ஏவின் முதல் பெண் இயக்குநராகவும் டிரம்ப் நியமித்துள்ளார்.

பதவி நீக்கம் தொடர்பாக முன்கூட்டியே டில்லரசனிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் வடகொரியாவுடனான உறவுகள் வெகுவாக முன்னேறி வருவதால் அவர் பதவியில் நீடிக்கவே விரும்பினார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய விவகாரம் உள்பட பல விடயங்களில் டிரம்ப் உடன் பொது வெளியில் அவர் கருத்து முரண்பட்டுள்ளார்.

- BBC - Tamil