பல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கை பெண்!

Report Print Vethu Vethu in அமெரிக்கா

இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் சாதனை படைத்து விருது வென்றுள்ளார்.

சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்ற வர்த்தகரான அனோமா கருணாசேன அமெரிக்காவில் விருது வென்றுள்ளார்.

2000ஆம் ஆண்டு அனோமா கருணாசேன அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க வைத்தியரான வயிலன் ஆய்வுக்காக இலங்கை வந்த சந்தர்ப்பத்தில் அனோமாவை சந்தித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பின் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இருவரும் திருமணம் செய்து அமெரிக்காவின் பொஸ்டன் நகரத்திற்கு சென்றுள்ளனர்.

அவர் அமெரிக்கா நோக்கி செல்லும் போது அங்கு பனி மழை பெய்துள்ளது. இதனால் அவரால் இந்த காலநிலையை எதிர்கொள்ள சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு பிடித்த உணவான சோறு மற்றும் தேங்காய் சம்பல் கிடைக்கவில்லை.

அனோமாவின் கணவர் பல உணவகங்களுக்கு சென்ற போதும் அவரால் இலங்கை உணவுகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து இலங்கை உணவுகளை கொண்ட உணவகம் ஒன்றை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதற்கமைய கணவரின் ஆசிர்வாதத்துடன் 2008ஆம் ஆண்டு கலிபோர்னியாவின், பிரதேசமொன்றில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு “இலங்கை இந்திய பெருங்கடலின் முத்து” (pearl of the ocean) என அவர் பெயரிட்டுள்ளார்.

அதன் பின்னர் தனது உணவகத்தில் விஷமற்ற சுத்தமான இலங்கை உணவுகளை வழங்க ஆரம்பித்தார். வெளிநாடு ஒன்றில் இலங்கை உணவை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்லது. எனினும் அனைத்து சவால்களையும் வென்று அவர் இந்த உணவுகளை வெற்றிகரமாக வழங்கி வைத்தார்.

அதற்கமைய போராடி பிரபல்யமடைந்த அனோமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சிறந்த உணவகத்திற்கான விருது கிடைத்துள்ளது.

ஒரு வருடம் என்ற சிறிய காலப்பகுதிக்குள் அவர் இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சமையல் கலைஞராக அவர் தெரிவாகினார்.

பாரிய வளர்ச்சியடைந்த அனோமா இன்னமும் இலங்கையின் பெயருடன் அந்த உணவகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.