ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார்

Report Print Nivetha in அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிக்கி ஹாலேவின் பதவி விலகலை அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், அவரது பதவி விலகலுக்கான காரணம் என்பது தொடர்பான முழுமையான தகவல் எதும் வெளியாக வில்லை.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29ஆவது தூதராக நிக்கி ஹாலே கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

மேலும், தெற்கு கரோலினா மாநிலத்தின் 116ஆவது ஆளுநராகவும் நிக்கி ஹாலே பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers