அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்

Report Print Thayalan Thayalan in அமெரிக்கா
அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயரிற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர் வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers