தோல்வியில் முடிவடைந்தது டொனால்ட் ட்ரம்பின் முயற்சி!

Report Print Murali Murali in அமெரிக்கா

அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மேற்கொண்ட புதிய முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் பாராளுமன்றத்தில் முறையிட்டார்.

எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டொனால்ட் டிரம்ப் கேட்ட தொகையை வழங்குவதற்கு மறுத்துவிட்டனர். இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் முக்கிய அரசு துறைகள் முடங்கின.

இதனால் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எல்லை சுவர் கட்டுவதற்கான நிதி கோரும் மசோதா உட்பட 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், இரண்டு மசோதாக்களும் நிறைவேறுவதற்கான தேவையான 60 வாக்குகளை பெற முடியாமல் தோல்வியை எட்டியது. இதனால் அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

Latest Offers