அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளிலும் அவசர நிலை பிரகடனம்!

Report Print Murali Murali in அமெரிக்கா

அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதான் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கடும் குளிர் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளதாகவும், தற்போது வரையில் குளிர் காரணமாக ஆறு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது வரையிலும் சுமார் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொது மக்களை வெளியே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் குளிரை 250 மில்லியன் அமெரிக்கர்கள் சந்திக்கவுள்ள நிலையில், 90 மில்லியன் பேர் -17 டிகிரி செல்சியஸ் டிகிரி வானிலையை எதிர்கொள்ள உள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸிலும், தொலைதூர மாநிலங்களான அலபாமா மற்றும் மிஸிசிப்பி உள்ளிட்ட பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Latest Offers

loading...