அமெரிக்காவை உறைய வைத்துள்ள கடும் பனி! எட்டு பேர் பலி

Report Print Murali Murali in அமெரிக்கா

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் குளிரான காலநிலை காரணமாக இதுவரையில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் மேற்கு பகுதி மாநிலங்கள் அனைத்து கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளது.

உறைபனி காரணமாக விறைத்தும், அதனுடன் தொடர்புபட்ட விபத்துக்களில் சிக்கியும் எட்டுப் பேர்வரையில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் இது கடும் மோசமான குளிர் காலநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் நிலவி வருகிறது.

இதனிடையே, நேற்று மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்துள்ளதாகவும், இந்த பனிப்பாறைகள் சிதைவு மேலும் விரிவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.