​ஏரியா 51இல் நடத்தப்படும் இரகசிய ஆய்வு? 40 வருடங்களுக்கு முன் பதிவாகிய மாறுபட்ட சிக்னல்

Report Print Sujitha Sri in அமெரிக்கா

வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) குறித்து பல்வேறு கருத்துகளும், விஷயங்களும் இன்று வரை உலகெங்கும் ஆழமாக பேசப்படுகின்றன.

​வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்களா, இல்லையா என்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பல பில்லியன் ​டொலர்கள் செலவு செய்து இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும்,

இவ்வாறான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அமெரிக்கா ஏரியா 51இல் இரகசியமாக ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.

மற்ற நாடுகளுக்கு தெரியக்கூடாது என்று பலத்த பாதுகாப்போடும் ஆராய்ச்சி செய்து வருகின்றது. இந்த ஆய்வு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அமெரிக்கா இது குறித்து யாருக்கும் வெளிப்படையாக ஏரியா 51இல் நடப்பது குறித்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வேற்றுக்கிரகவாசிகளின் 'ஸ்பேஷிப்' குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்.

ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து உலாவுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பார்ப்பதற்கு மனித உடலோடு சற்று மாறுபட்ட உருவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

சனி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஏராளமான நிலவுகள் இருக்கின்றன. இந்த நிலவுகளில் ஏலியன்கள் வாழ்வதற்கான ஏற்ற காலநிலைகள் இருக்கின்றன.

மேலும் அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தையும், கட்டமைத்துள்ளதாக இது தொடர்பான ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நாசாவின் 'காசினி' விண்கலம் அனுப்பியிருந்த படமொன்று இது தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த ஏலியன்கள் விண்வெளியை பாதுகாப்பதாகவும், ஆய்வாளர்கள் சிலர் நம்புகின்றனர். விண்வெளியில் ஏற்படும் ஆபத்துகளை அவர்கள் கண்டறிந்து அழித்து வருவதாகவும் நம்பிக்கையொன்று உண்டு.

விஞ்ஞான வளர்ச்சியில் ஏலியன்கள் மகிவும் கெட்டிகாரர்களாக இருக்கின்றனர். இவர்கள் 'ஸ்பேஸ்ஷிப்' எனப்டும் பறக்கும் தட்டுக்களையும் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், பூமிக்கு வந்து செல்வதற்காக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வேற்றுக்கிரகவாசிகளின் ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாங்கிஸ் தெரிவித்திருந்தார்.

1977ஆம் ஆண்டு கோடை கால இரவுப் பொழுதில் ஒரு நாள்... விண்வெளி மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஜெர்ரி ஹேமான், தனது ஆராய்ச்சியில் வழக்கமாக பரபரப்பாக இருந்தார்.

அப்போது அவர் வைத்திருந்த கணினியில் சற்று மாறுப்பட்ட 'சிக்னல்' பதிவாகியிருந்தது. இது 'ரேடியோ சிக்னல்' ஆகும். சுமார் 72 செக்கன்கள் வரை தொடர்ச்சியாக இந்த சிக்னல் கிடைத்து கொண்டே இருந்தது.

இந்த ரேடியோ சிக்னலை கணினி உதவியோடு பரிமாற்றம் செய்ய 3 நாட்கள் ஆனது. இந்த சிக்னல் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது.

வேற்றுக்கிரகவாசிகள் குறித்து வல்லரசு நாடான ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெரும் செலவில் ஆராய்ச்சி செய்து வருகின்ற போதிலும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து முழு ஆராய்ச்சியின் தகவலை முழுமையாக வெளியிடவில்லை என்றே கூற முடியும்.

இரகசியமாக தீர்க்கமான முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஏரியா 51 குறித்தும், வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நடக்கும் ஆராய்ச்சி குறித்தும் அமெரிக்காவின் ஜனாதிபதிகளுக்கு தெரிந்தாலும் யாரும் இதுவரை வெளிப்படையாகக் கூறியதில்லை.

அமெரிக்கக் கடற்படை மாலுமிகள் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளைப் பார்ப்பதாகக் கூறப்படுவது குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என்றும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். கடற்படை மாலுமிகள் வானில் பார்த்தது என்ன என்பது குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தமக்கு ஒரே ஒரு முறை மட்டும் விளக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது அவர்களின் ஆராய்ச்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது