கனடாவுக்கு சென்ற பெருமளவு இலங்கையர்கள் கைது

Report Print Vethu Vethu in அமெரிக்கா

கனடாவுக்கு சென்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இலங்கை, பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மெக்சிக்கோ பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

நீர், உணவு இல்லாமையினால் இவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேச எல்லைக்குள் மெக்சிக்கோவின் ஊடாக நுழைவது இவர்களின் நோக்கமாகும்.

இவர்கள் கட்டார் ஊடாக துருக்கி, கொலம்பியா, ஈக்குவாடோர், பனாமா, குவத்தமாலா ஆகிய நாடுகள் ஊடாக மெக்சிக்கோ சென்றடைந்துள்ளார்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து படகு மூலம் மெக்சிக்கோ – அமெரிக்க எல்லையை சென்றடைந்துள்ளார்கள் என்று மெக்சிக்கோ பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

கனடாவை சென்றடைவது இவர்களின் பிரதான இலக்காகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers