அமெரிக்கா எழுக தமிழ் எழுச்சி நிகழ்விற்கு அணிதிரளுமாறு அழைப்பு

Report Print Malar in அமெரிக்கா

அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு முன்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற உள்ள எழுக தமிழ் எழுச்சி நிகழ்விற்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க் எழுக தமிழ் மன்றமானது, இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும், தமிழர்களின் அரசியற் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தீவில் தமிழர் தாயகப்பகுதியில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை இதன்போது முன்வைக்கிறது.

இந்த எழுக தமிழ் நிகழ்விற்காக கனடாவில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்ற ஆறு அம்ச கோரிக்கைகளாவன,

1. எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்ரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும்.

5. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.

6. இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.

Latest Offers