தேர்தலின் பின்னரும் உறவு தொடரும் - அமெரிக்கா

Report Print Ajith Ajith in அமெரிக்கா

நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னரும் இலங்கையுடனான அரசியல் உறவு தொடரும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் இதனை உள்ளூர் செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தாம் ஜனாதிபதியையும், எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இலங்கை பிரசன்னம் மாத்திரம் அன்றி அந்த நாட்டின் முதலீடுகளும் அமெரிக்காவின் கவனத்தில் உள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.