வளைகுடா யுத்தத்தின் பதற்றமான காட்சிகள்! அப்படி என்னதான் பிரச்சினை அமெரிக்காவுக்கு?

Report Print Niraj David Niraj David in அமெரிக்கா

வளைகுடா விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்ட அரசியல், இராஜதந்திர, ராணுவ நடவடிக்கைகளானது, வளைகுடாவின் கேந்திர முக்கியத்திலும், அங்கு கொழித்துக்கொண்டிருக்கும் எண்ணெய் வளத்தின் மீதும் அமெரிக்கா எத்தனைதூரம் கரிசனையாக இருந்து வந்தது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

வளைகுடா என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு முக்கியமான ஒரு பிராந்தியம் என்பதை புரிந்து கொள்வதற்கும், வளைகுடாவில் கால் ஊன்றுவதற்கு அமெரிக்கா எப்படி எப்படியெல்லாம் நகர்வெடுத்தது என்று அறிந்து கொள்வதற்கும், அந்த சம்பவங்கள் பற்றிய விரிவான பார்வை அவசியம்.

வளைகுடாவின் எண்ணெய் வியாபாரத்தைக் கையகப்படுத்துவதற்கும், அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அமெரிக்கா எந்த எல்லைக்கும் செல்லும் என்கின்ற உண்மையை சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: