2021ஆம் ஆண்டில் இலங்கையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கிய அமெரிக்கா

Report Print Steephen Steephen in அமெரிக்கா

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இலங்கையில் செயற்படுத்தும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 59 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு பணத்தை ஒதுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மதிப்பீட்டு அறிக்கை ஊடாக கோரியுள்ளார்.

2021 நிதியாண்டில் முன்னெடுக்கப்படும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா சம்பந்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களாக வேறு நாடுகளின் அபிவிருத்திக்காக அந்த நாட்டு ஜனாதிபதி ராஜாங்க திணைக்களம் ஊடாக வருடாந்தம் மதிப்பீட்டு நிதியை கோருவார்.

அமெரிக்க ஜனாதிபதியின் சார்பில் புதிய கோரிக்கையை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதி செயலாளர் ஸ்டீவன் பிகுன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கட்டுப்பாட்டாளர் மார்க் ஸ்ரீன் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைக்கு அமைய அமெரிக்க ராஜாங்க திணைக்களம் 2021ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும் அமெரிக்க அபிவிருத்தித் திட்டங்களுக்காக 39.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

மேலும் 9.38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest Offers