அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்றா?

Report Print Vethu Vethu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை எனவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பிறேசில் நாட்டு ஜனாதிபதியின் ஊடகச் செயலாளருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது,

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.

அதற்கமைவாக ரொனால்ட் ட்ரம்பிற்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video