கொரோனா வைரஸ் சீனாவின் வைரஸ்! இரண்டாவது முறையாகவும் கூறியுள்ள ட்ரம்ப்

Report Print Ajith Ajith in அமெரிக்கா

கொரொனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் 8 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் காவுகொள்ளப்பட்டனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒருநாளில் மாத்திரம் 475 பேர் மரணமாகினர். இதில் லொம்பாடி என்ற இடத்தில் மாத்திரம் 319 பேர் மரணமாகினர்.

பிரித்தானியாவில் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளன. அங்கு 104 பேர் மரணமாகியுள்ளனர். 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் இந்த தொற்றினால் 8 பேர் மரணித்துள்ள நிலையில், அவுஸ்திரேவியாவில் 6 பேர் மரணமாகியுள்ளனர். 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 115 பேர் மரணமாகியுள்ளனர்.

இதற்கிடையில் சீனாவின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் சீனாவின் வைரஸ் என்று இரண்டாவது முறையாகவும் கூறியுள்ளார்.