அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்! ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் பாதிப்பு

Report Print Murali Murali in அமெரிக்கா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சமார் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதனால் தற்போது வரையில் 782,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பத்தில் சீனாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கிய போதிலும், தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதன் வீரியம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில், இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரும் கொரோனா தொற்றினால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், உலக அளவில் அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2995ஆக உயர்ந்துள்ளது.