அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் 24 மணி நேரத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளதுடன் பிரான்ஸில் நேற்றைய தினத்திற்குள் ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை ஸ்பெய்னில் 850 பேரும், இத்தாலியில் 766 பேரும், பிரித்தானியாவில் 684 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்றைய தினம் 59 ஆயிரத்து 179 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அதிகமானனோர் நேற்றைய தினம் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டனர். 32 ஆயிரத்து 88 பேர் நேற்று அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 10 லட்சத்து 99 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.