அடுத்த சில வாரங்கள் கடினமானதாக இருக்கும் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

Report Print Steephen Steephen in அமெரிக்கா

அதிகமான செயற்கை சுவாச கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக மாநிலங்கள் போராடி வரும் நிலையில், அடுத்த சில வாரங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அடுத்த சில வாரங்கள் அமெரிக்கர்களுக்கு கடினமாக வாரங்களாக இருக்கும், அதிகளவான மரணங்கள் நிகழும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 8 ஆயிரத்து 454 பேர் இறந்துள்ள சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லூசியானா மாநிலத்தில் 400க்கு மேற்பட்டோரும், மிச்சிகனில் 500 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை ஏப்ரல் 12 ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்குள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை சாதாரண நிலைமையில் முன்னெடுத்துச் செல்லும் தேவை தமக்கு இருப்பதாக ட்ரம்ப் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மீண்டும் இதனை கூறவில்லை.

துரதிஷ்டவசமாக அதிகளவான மரணங்கள் ஏற்படலாம். எனினும் கொரோனா வைரஸை முடிந்தளவு கூடிய விரைவில் தோற்கடிக்க வேண்டியது அவசியம். நாம் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதே இதற்கு காரணம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.