Factcheck: அமெரிக்காவின் ட்ரம்ப் கோபுரத்தில் பாரிய தீ விபத்து என வதந்தி

Report Print Sujitha Sri in அமெரிக்கா

அமெரிக்காவிலுள்ள 58 தளங்களைக் கொண்டதும் 664 அடிகள் உயரமானதுமான டிரம்ப் கோபுரத்தில் (Trump Tower) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது.

நியூயோர்க் நகரத்தின் மிட்டவுன் மான்ஹட்டனில், 721-725 ஐந்தாம் அவெனியூவில், 56 ஆம் 57 ஆம் வீதிகளுக்கு இடையே அமைந்துள்ள கோபுரத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சம்வம் தற்போது பகிரப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.